சந்திரபாபு நாயுடு கடவுளிடமே அரசியல் செய்கிறார் - ரோஜா


சந்திரபாபு நாயுடு கடவுளிடமே அரசியல் செய்கிறார் - ரோஜா
x

இல்லாத ஒன்றை தனது அரசியலுக்காக திசைதிருப்பி, நாடகத்தை சந்திரபாபு நாயுடு அரங்கேற்றுவதாக ரோஜா தெரிவித்துள்ளார்.

அமராவதி,

திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரம் குறைந்துள்ளதாக வந்த புகாரைத் தொடர்ந்து, அதனை மத்திய அரசின் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி சோதனை செய்து பார்த்ததில், அந்த நெய்யில் மாட்டுக்கொழுப்பு, பன்றிக்கொழுப்பு இருப்பது தெரியவந்தது. இதனை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக தெரிவித்ததுடன், முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி அரசு மீது குற்றச்சாட்டையும் கூறினார்.

சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஆந்திர முன்னாள் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி, இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்த நிலையில், லட்டு விவகாரம் தொடர்பாக முன்னாள் மந்திரி ரோஜா தெரிவித்து இருப்பதாவது;

திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் உண்மையிலேயே கலப்படம் செய்திருந்தால், அறங்காவலர் குழுவில் உறுப்பினர்களாக இருந்த பாஜகவை சேர்ந்தவர்கள் ஏன் அப்போதே மோடி, அமித்ஷாவிடம் புகார் அளிக்கவில்லை? இல்லாத ஒன்றை தனது அரசியலுக்காக திசைதிருப்பி, நாடகத்தை சந்திரபாபு நாயுடு அரங்கேற்றியுள்ளார்.

சந்திரபாபு நாயுடு அரசியலுக்காக இவ்வளவு கீழ்த்தரமாக இறங்குவார் என நினைக்கவில்லை. ஏழுமலையானுக்கு உலகம் முழுவதும் பக்தர்கள் உள்ளனர். லட்டு பிரசாதத்தில் கலப்படம் உள்ளதாக கூறினால் எவ்வளவு பக்தர்களின் மனங்கள் பாதிக்கப்படும் என்பதை இந்த வயதிலாவது அவருக்கு தெரிந்து இருக்க வேண்டும். சித்தூர் மாவட்டத்தில் தான் சந்திரபாபு நாயுடு பிறந்தார். நானும் பிறந்தேன். மீண்டும் கடவுளிடமே அரசியல் செய்கிறார். கடவுளே பார்த்து அவருக்கு தண்டனை கொடுப்பார்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story