ஜார்க்கண்ட் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் சம்பாய் சோரன்


ஜார்க்கண்ட் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் சம்பாய் சோரன்
x

ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து புதிய முதல்-மந்திரியாக சம்பாய் சோரன் பதவியேற்க உள்ளார்.

ராஞ்சி,

நிலக்கரி சுரங்க முறைகேடு, நில மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜார்க்கண்ட் மாநில போக்குவரத்துத்துறை மந்திரியாக இருக்கும் சம்பாய் சோரன் அந்த மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக பதவியேற்க இருக்கிறார். முன்னதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவராக நேற்று சம்பாய் சோரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனிடையே ஜார்க்கண்டில் ஜே.எம்.எம் தலைமையிலான கூட்டணி இன்று பிற்பகல் அம்மாநில கவர்னரை சந்திக்க நேரம் கேட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜேஷ் தாக்கூர் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளரிடம் பேசிய அவர், "கூட்டணியை வழிநடத்தும் ஜே.எம்.எம். சட்டமன்ற கட்சித் தலைவர் சம்பாய் சோரன், பெரும்பான்மையை நிரூபிக்க இன்று மாலை கவர்னரிடம் நேரம் கேட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சியமைக்க சம்பாய் சோரன் உரிமை கோரியுள்ளார். கவர்னரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சம்பாய் சோரன், "ஆட்சி அமைப்பதற்கான பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என கவர்னர் தெரிவித்தார்" என்று கூறினார்.


Next Story