காஷ்மீரில் இயல்புநிலையை காட்ட மத்திய அரசு காஷ்மீரி பண்டிட்களின் உயிரைப் பணயம் வைத்துள்ளது - சிவசேனா எம்.பி. கடும் தாக்கு


காஷ்மீரில் இயல்புநிலையை காட்ட மத்திய அரசு காஷ்மீரி பண்டிட்களின் உயிரைப் பணயம் வைத்துள்ளது - சிவசேனா எம்.பி. கடும் தாக்கு
x

காஷ்மீர் பண்டிட்டுகளின் விஷயத்தில் சற்று அஜாக்கிரதையாக மத்திய அரசு செயல்படுவதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

சிவசேனா கட்சியின் மாநிலங்களவை எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, காஷ்மீரி பண்டிட்கள் விவகாரத்தில் மத்திய அரசு மிகுந்த ஆபத்தான முடிவுகளை எடுத்து வருகிறது என்று விமர்சித்துள்ளார்.

காஷ்மீரில் இருந்து இடம்பெயர்ந்த காஷ்மீரி பண்டிட்கள் கவுரவமான முறையில் திரும்புவதையும், அவர்களுக்கு மறுவாழ்வு செய்வதையும் அரசாங்கம் உறுதி செய்யும். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் கடைசி கட்டத்தில் உள்ளது என மத்திய மந்திரி பிரஹலாத் சிங் படேல் தெரிவித்தார்.

இந்த நிலையில், பிரஹலாத் சிங் படேலின் கருத்துக்கு பதிலளித்த சிவசேனா தலைவர் பிரியங்கா சதுர்வேதி, "மறுவாழ்வு பிரச்சினையை தீர்க்க நீங்கள் எதுவும் செய்ய மாட்டீர்கள். காஷ்மீரில் இயல்புநிலையை காட்ட அரசாங்கம் காஷ்மீரி பண்டிட்களின் உயிரைப் பணயம் வைத்துள்ளது" என்று கடுமையாக சாடினார்.

முன்னதாக, நபிகள் நாயகம் குறித்த சர்ச்சையில், இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதாக மிரட்டல் விடுத்த அல்கொய்தாவை மத்திய கிழக்கு நாடுகள் கண்டிக்க வேண்டும் என பிரியங்கா சதுர்வேதி வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், காஷ்மீர் பண்டிட்டுகளின் விஷயத்தில் சற்று அஜாக்கிரதையாக மத்திய அரசு செயல்படுவதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.


Next Story