லாரி கேபின்களில் ஏ.சி. வசதி கட்டாயம்; வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல்
லாரி கேபின்களில் ஏ.சி. வசதி கட்டாயமாக்கப்படும் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு தற்போது ஒப்புதல் அளித்திருப்பதாக சாலை போக்குவரத்து நெடுஞ்சாலை துறை அமைச்சர் கூறியுள்ளார்.
போக்குவரத்து துறையில் லாரி டிரைவர்கள் முக்கிய பங்காற்றுவதாக கடந்த மாதம் கூறியிருந்த சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி, அவர்களின் பணிச்சூழல் மற்றும் மனநிலை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதில் முக்கியமாக லாரி கேபின்களில் ஏ.சி. வசதி கட்டாயமாக்கப்படும் என அவர் அறிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து லாரி கேபின்களில் ஏ.சி. வசதி கட்டாயமாக்கப்படும் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு தற்போது ஒப்புதல் அளித்திருப்பதாக நேற்று அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'என்2 மற்றும் என்3 லாரிகளின் கேபின்களில ஏ.சி. வசதி கட்டாயமாக்கப்படும் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. லாரி டிரைவர்கள் சாலை பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுகின்றனர்' என குறிப்பிட்டு உள்ளார். இதன் மூலம் லாரி டிரைவர்களின் செயல்திறனை மேம்படுவதுடன், சோர்வு பிரச்சினை தீர்க்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.