தொழில் தொடங்குவதை எளிதாக்க "பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்கள்" விதிமுறைகளில் திருத்தம் - மத்திய அரசு


தொழில் தொடங்குவதை எளிதாக்க பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்கள் விதிமுறைகளில் திருத்தம் - மத்திய அரசு
x

மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை, இந்த சட்டத்திருத்தத்தை செய்கிறது.

புதுடெல்லி,

மின்னணு சாதனங்கள் அடைக்கப்பட்ட தொகுப்பில் குறிப்பிடப்படாத சில கட்டாய விவரங்களை, கியூ ஆர் கோடு முறையின் மூலம் வெளியிடுவதை அனுமதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு முன்புவரை, மின்னணு சாதனங்கள் உட்பட, பேக்கிங் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களிலும், சட்டரீதியான அளவியல் (அடைக்கப்பட்ட பொருட்கள்) விதிமுறை 2011-ன்படி, பேக்கிங் மீது சில விவரங்களை வெளியிடுவது கட்டாயமாக இருந்தது.

இந்த நிலையில், தொழில் தொடங்குவதை எளிதாக்கவும், மின்னணு தொழிற்சாலைகளின் சுமையைக் குறைக்கவும், சட்ட ரீதியான அளவியல் (அடைக்கப்பட்ட பொருட்கள்) விதிமுறைகள் 2011-ஐ மத்திய அரசு திருத்தியுள்ளது.

மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை, சட்ட ரீதியான அளவியல் (அடைக்கப்பட்ட பொருட்கள்) (இரண்டாவது சட்டத்திருத்தம்) விதிமுறைகள் 2022 வாயிலாக, இந்த சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சட்டத்திருத்தம், விரிவான விவரங்களை தொழில் நிறுவனங்கள் கியூ ஆர் கோடு வாயிலாக வெளியிடுவதை அனுமதிக்கிறது. மேலும், தொகுப்பின் மேல்பகுதியில், முக்கிய விவரங்களை தெளிவாக வெளியிடுவதையும் அனுமதிப்பதோடு, எஞ்சிய விவரங்களை கியூ ஆர் கோடு வாயிலாக நுகர்வோருக்குத் தெரிவிக்கவும் வகை செய்கிறது.

குறிப்பாக, தயாரிப்பாளர் அல்லது பேக்கிங் செய்வோர் அல்லது இறக்குமதியாளரின் முகவரி, அந்தப் பொருளின் பொதுவான பெயர், அளவு, வடிவம், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி நீங்கலான நுகர்வோர் சேவை விவரங்களையும் கியூ ஆர் கோடு மூலம் அறிந்து கொள்ளலாம்.


Next Story