மணிப்பூரில் செல்போன் இணைய சேவை துண்டிப்பு
மணிப்பூர் மாநில உள்துறை அமைச்சகம், மாநிலத்தில் செல்போன் இணைய சேவையை துண்டித்துள்ளது.
இம்பால்,
மணிப்பூரில், அனைத்து பழங்குடியின மாணவர்கள் சங்கம், தன்னாட்சி பெற்ற மாவட்ட கவுன்சில் மசோதாவை சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. அதற்காக பொருளாதார முடக்கத்தை அறிவித்துள்ளது.
அதையொட்டி, வாகனங்கள் எரிப்பு, அலுவலகங்கள் மீது தாக்குதல் போன்ற வன்முறை சம்பவங்கள் நடந்தன. இந்நிலையில், மேலும் வன்முறை பரவுவதை தடுக்க மணிப்பூர் மாநில உள்துறை அமைச்சகம், மாநிலத்தில் செல்போன் இணைய சேவையை துண்டித்துள்ளது. நேற்று முதல் 5 நாட்களுக்கு இந்த தடை அமலில் இருக்கும்.
சமூக விரோத சக்திகள், சமூக வலைத்தளங்கள் மூலம் பொய் செய்திகளை பரப்பி வன்முறையை தூண்டி விடுவதால், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க செல்போன் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
Related Tags :
Next Story