ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்ற முன்னாள் மத்திய அரசு அதிகாரி வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை
முன்னாள் மத்திய நிதித்துறை செயலாளர் அரவிந்த் மாயாராம் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
புதுடெல்லி,
கடந்த 2004-ம் ஆண்டு ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதற்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்யும் டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய நிதித்துறை செயலாளர் அரவிந்த் மாயாராம் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். தற்போது அவர் ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசின் பொருளாதார ஆலோசகராக உள்ளார். அண்மையில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் அரவிந்த் மாயாராம் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story