அரியானாவில் லஞ்ச வழக்கில் 2 ராணுவ அதிகாரிகள் உள்பட 4 பேர் கைது சி.பி.ஐ. நடவடிக்கை
லஞ்சம் கொடுக்க முன்வந்த 2 ஒப்பந்ததாரர்களையும் கையும் களவுமாக பிடிக்க வலைவிரித்தது. அதில், ராணுவ அதிகாரிகளுக்கு ரூ.22.48 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டபோது அவர்கள் பிடிபட்டனர்.
புதுடெல்லி,
அரியானா மாநிலம் அம்பாலா கன்டோன்மென்டில் பணிபுரியும் ராணுவ அதிகாரிகள் லெப்டினன்ட் கர்னல் ராகுல் பவார், சுபேதார் மேஜர் பிரதீப் குமார். கன்டோன்மென்ட் பகுதியில் பெரும்பாலான பணிகளுக்கு டெண்டர் வழங்க தனியார் ஒப்பந்ததாரர்களிடம் இவர்கள் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த சி.பி.ஐ., ராணுவ அதிகாரிகள் இருவரையும், அவர்களுக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்த 2 ஒப்பந்ததாரர்களையும் கையும் களவுமாக பிடிக்க வலைவிரித்தது. அதில், ராணுவ அதிகாரிகளுக்கு ரூ.22.48 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டபோது அவர்கள் பிடிபட்டனர்.
அதைத் தொடர்ந்து, லெப்டினன்ட் கர்னல் ராகுல் பவாரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.32.50 லட்சமும், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. அதேபோல, குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களிடம் இருந்து ரூ.16 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. நான்கு பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.