காவிரி விவகாரம்; கர்நாடகாவில் இன்று அனைத்து கட்சி கூட்டம்
காவிரி விவகாரம் குறித்து முடிவெடுக்க கர்நாடகாவில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
பெங்களூரு,
கர்நாடகாக அரசு தமிழகத்திக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு, அம்மாநில விவசாயிகள் மற்றும் பாஜக தரப்பில் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில், காவிரியில் கூடுதல் நீர் திறந்து விட கோரி தமிழக அரசு தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விரைந்து விசாரிக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில், காவிரி வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் அடங்கிய புதிய அமர்வு அமைக்கப்படும் என்று தலைமை நீதிபதி அறிவித்திருந்தார்.
அதன்படி, காவிரி வழக்கை விசாரிக்க 3 பேர் அடங்கிய புதிய அமர்வை சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ளது. இந்த வழக்கு 57 வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், வரும் 25ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் புதிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில், காவிரி விவகாரம் குறித்து முடிவெடுக்க, கர்நாடகாவில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.