வாலிபரை கொலை செய்ய முயன்ற வழக்கு; 3 பேருக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை


வாலிபரை கொலை செய்ய முயன்ற வழக்கு;  3 பேருக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை
x

வாலிபரை கொலை செய்ய முயன்ற வழக்கில் 3 பேருக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சிவமொக்கா;

முன்விரோதம்

சிவமொக்கா டவுன் சராவதி நகரை சேர்ந்தவர் ஹரீஷ் (வயது 24). கூலி தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மஞ்சு, அனிலா மற்றும் பிரசாந்த் ஆகியோருக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 17-ந் தேதி ஹரீஷ் கிராமத்தில் உள்ள கால்வாய் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மஞ்சு, அனிலா, பிரசாந்த் ஆகிய 3 பேரும் ஹரீசிடம் மீண்டும் வாக்குவாதம் செய்துள்ளனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர்கள் 3 பேரும் சேர்ந்து ஹரீசை பயங்கர ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பி சென்றனர். இதில் பலத்த காயமடைந்த ஹரீஷ், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து தொட்டபேட்டை போலீசார் கொலை முயற்சி வழக்குப்

பதிவு செய்து மஞ்சு, அனிலா மற்றும் பிரசாந்த் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

தலா 7 ஆண்டு சிறை

இது தொடர்பான வழக்கு விசாரணை சிவமொக்கா மாவட்ட கூடுதல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கின் விசாரணை முடிவடைந்து நேற்று முன்தினம் நீதிபதி மனு, தீர்ப்பு வழங்கினார்.

அப்போது ஹரீசை பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ய முயன்றது நிரூபிக்கப்பட்டதால் மஞ்சு, அனிலா, பிரசாந்த் ஆகிய 3 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


Next Story