'கொலிஜீயம்' முறைக்கு எதிராக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 24-ந்தேதி விசாரணை
நீதிபதிகளை நியமிக்கும் ‘கொலிஜீயம்’ முறைக்கு எதிராக வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் 24-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.
புதுடெல்லி,
நீதிபதிகளை நியமிக்கும் 'கொலிஜீயம்' முறைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு 'ரிட்' வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு முன்னாள், இந்நாள் நீதிபதிகளின் உறவினர்கள், அவர்களுக்கு உதவும் வக்கீல்கள், பெயர்பெற்ற வக்கீல்கள் உள்ளிட்டோரை நீதிபதிகளாக நியமிக்கும் நிலை உருவாகி உள்ளது. இதைத் தவிர்க்க அரசு துறைகள் சாராத தேசிய நீதித்துத்துறை நியமன ஆணையத்தை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த 'ரிட்' வழக்கை அவசரமாக விசாரிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் வக்கீல் மேத்யூ நெடும்பாறா முறையிட்டார்.
இதையேற்ற சுப்ரீம் கோர்ட்டு, இந்த 'ரிட்' வழக்கு வரும் 24-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தது.
Related Tags :
Next Story