காங்கிரஸ் கட்சி மீது அவதூறு குற்றச்சாட்டு: பிரதமரிடம் தேர்தல் கமிஷன் ஆதாரம் கேட்குமா? கபில் சிபல் எம்.பி. கேள்வி


காங்கிரஸ் கட்சி மீது அவதூறு குற்றச்சாட்டு: பிரதமரிடம் தேர்தல் கமிஷன் ஆதாரம் கேட்குமா? கபில் சிபல் எம்.பி. கேள்வி
x

காங்கிரஸ் கட்சி மீது அவதூறு குற்றச்சாட்டு பரப்பும் பிரதமரிடம் தேர்தல் கமிஷன் ஆதாரம் கேட்குமா? என கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுடெல்லி,

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி சமீபத்தில் ஊடகங்களில் ஒரு விளம்பரம் வெளியிட்டது. அதில் அங்கு ஆளும் பா.ஜ.க. அரசைக் குறிவைத்து 'கரப்ஷன் ரேட் கார்டு' (ஊழல் விகித அட்டை) வெளியிட்டு, அதன் ஊழல்களைப் பட்டியலிட்டது.இதுகுறித்து பா.ஜ.க. தேர்தல் கமிஷன் கவனத்துக்கு கொண்டு போனது. இதனையடுத்து ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் தாருங்கள் என கேட்டு கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.இந்த நிலையில் தேர்தல் கமிஷனுக்கு முன்னாள் மத்திய மந்திரியும், மாநிலங்களவை எம்.பி.யும், மூத்த வக்கீலுமான கபில் சிபல் காட்டமான கேள்வி எழுப்பி டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறி இருப்பதாவது:-

பா.ஜ.க.வுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து காங்கிரஸ் கட்சியிடம் தேர்தல் கமிஷன் ஆதாரம் கேட்டிருக்கிறது. பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்களுடன் புறவாசல் வழியாக காங்கிரஸ் அரசியல் பேச்சுவார்த்தை நடத்துகிறது என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியதற்கு அவரிடம் தேர்தல் கமிஷன் ஆதாரம் கேட்குமா? பிரதமரிடம் ஆதாரம் கேட்பதற்கு தேர்தல் கமிஷனுக்கு துணிச்சல் இல்லையா? இவ்வாறு அவர் கூறி உள்ளார்.



Next Story