ஆதாரம் இன்றி கணவரை குடிகாரர் என்று சொல்லக்கூடாது: மும்பை ஐகோர்ட் கருத்து
ஆதாரங்கள் இன்றி கணவரை குடிகாரர், பெண்கள் பின்னால் சுற்றுபவர் என கூறுவது கொடூரமானது என்று மும்பை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
மும்பை,
மும்பை ஐகோர்ட்டில் 50 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர், தனது விவகாரத்துத் தொடர்பாக மேல்முறையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்து இருந்தார். குடும்ப நல நீதிமன்றம் அவர்களுக்கு விவகாரத்து வழங்கி இருந்த நிலையில், அதை எதிர்த்து இந்த பெண் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த மும்பை ஐகோர்ட், குடும்ப நல நீதிமன்ற அளித்த தீர்ப்பை உறுதி செய்தது.
மேலும் உத்தரவில் மும்பை ஐகோர்ட் முக்கிய கருத்துக்களையும் தெரிவித்துள்ளது. அதில் ஆதாரங்கள் எதுவும் இன்றி கணவரை பெண்கள் பின்னால் சுற்றுபவர் என்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் கூறுவது கொடூரமானது என்றும் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story