காரிப் பருவத்திற்கான உர மானியம் வழங்க ரூ.1.08 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
காரிப் பருவத்திற்கான உர மானியம் வழங்க ரூ.1.08 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி,
காரிப் பருவத்திற்கான உர மானியம் வழங்க ரூ.1.08 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் உரத்தின் விலை அதிகரிக்கப்படாது எனவும் மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
யூரியாவுக்கு ரூ.70,000 கோடியும், டி-அம்மோனியம் பாஸ்பேட்டுக்கு ரூ 38,000 கோடியும் அரசு செலவிடும் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள விவசாயிகள் உரிய நேரத்தில் உரத்தைப் பெறுவதும், சர்வதேசச் சந்தையில் உரத்தின் விலையில் மாறுபாடுகள் ஏற்படும் போதெல்லாம் சுமையைத் தாங்க வேண்டியதில்லை என்பதும் நமது அரசின் அவசியம் என்றும் கடந்த ஆண்டு அரசு பட்ஜெட்டில் உர மானியத்திற்காக ரூ.2.56 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது என்று மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story