பெங்களூரு பஸ் நிலையங்களில் விடிய, விடிய மக்கள் கூட்டம்


பெங்களூரு பஸ் நிலையங்களில் விடிய, விடிய மக்கள் கூட்டம்
x

பெங்களூரு பஸ் நிலையங்களில் விடிய, விடிய மக்கள் கூட்டம் இருந்தது.

பெங்களூரு:

தீபாவளியையொட்டி தொடர் விடுமுறையால் பெங்களூருவில் இருந்து லட்சக்கணக்கானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு நேற்று புறப்பட்டனர். இதனால் பஸ், ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக பெங்களூருவில் உள்ள சாந்திநகர், சாட்டிலைட், மெஜஸ்டிக் பஸ் நிலையங்களும், கலாசிபாளையா மார்க்கெட்டில் உள்ள தனியார் ஆம்னி பஸ்கள் நிற்கும் பகுதியிலும் மக்கள் கூட்டம் பெருந்திரளாக இருந்தது. இதை பயன்படுத்தி தனியார் ஆம்னி பஸ் நிறுவனங்கள் டிக்கெட் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தின. ரூ.800 முதல் ரூ.1,000 வரை என்று இருந்த தனியார் ஆம்னி பஸ் டிக்கெட் கட்டணம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருந்தது.

இதுபற்றி அறிந்த போக்குவரத்து துறை அதிகாரிகள் பெங்களூரு ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் ஆம்னி பஸ் நிறுவனத்தில் சோதனை செய்து டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்பட்டு இருந்ததற்காக வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இதற்கிடையே விடிய, விடிய மக்கள் கூட்டமும் பஸ் நிலையங்களில் அலைமோதியது குறிப்பிடத்தக்கது.


Next Story