காஷ்மீரில் பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த 'டிரோன்' மீது துப்பாக்கி சூடு
காஷ்மீரில் பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த ‘டிரோன்’ மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டனர்.
ஜம்மு,
காஷ்மீரின் கனாசக் பகுதியில் சர்வதேச எல்லையையொட்டி எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 9.40 மணிக்கு வானில் விட்டு விட்டு ஒளிரும் சிவப்பு விளக்கு தெரிந்தது. அது பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த 'டிரோன்' ஒன்றின் விளக்கு என்பதை உணர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அதை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதனால் அந்த 'டிரோன்' மாயமாகி மறைந்துவிட்டது. அதைத் தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் பாதுகாப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
முன்னதாக ஜம்மு, ரஜவுரி மாவட்டங்களில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளின் 3 ரகசிய பதுங்கு இடங்களை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர். 7 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதுடன், பாகிஸ்தானில் இருந்து டிரோன்கள் மூலம் கொண்டுவந்து போடப்பட்ட பெருமளவிலான ஆயுதங்கள், வெடிபொருட்களையும் கைப்பற்றினர்.
காஷ்மீர் எல்லைப்புற மாவட்டங்களில் டிரோன்கள் மூலம் போடப்படும் ஆயுதங்களை சேகரித்து வைக்கவும், பிற இடங்களுக்கு அனுப்பவும் இந்த பதுங்கு இடங்கள் அமைக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.