பீகாரில் அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழுந்த விவகாரம்: 14 பொறியாளர்கள் சஸ்பெண்ட்
பீகாரில் பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாட்னா,
பீகாரில் அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கடந்த இரண்டு வாரங்களில் மொத்தம் 12 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது. இதனை அடுத்து, 14 பொறியாளர்களை பணி இடைநீக்கம் செய்து அம்மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், புதிய பாலங்களை புனரமைக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
குற்றவாளிகளாக கண்டறியப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது கட்டுமான செலவு விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியாளர்களின் அலட்சியம் மற்றும் கண்காணிப்பு பலனளிக்காததே பாலங்கள் இடிந்து விழுந்ததற்கு முக்கிய காரணம் என பறக்கும் படையினர் அறிக்கை சமர்ப்பித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story