மும்பை போதைப்பொருள் வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட 5 பேர் விடுவிப்பு
போதிய ஆதாரம் இல்லாததால் கோர்டேலியா போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஆர்யன் கான், அவின் சாஹு மற்றும் 4 நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மீது வழக்கு எதுவும் இல்லை என போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
மும்பை
கடந்த ஆண்டு நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வழக்கில் போதைப்பொருள் தடுப்பு நிறுவனம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. போதைப்பொருள் தடுப்பு நிறுவனம் 14 குற்றவாளிகளின் பெயரை குறிப்பிட்டு 6,000 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் மற்றும் 5 பேரை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) வெள்ளிக்கிழமை விடுவித்து உள்ளது.
சோதனையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஆர்யன் கான் குற்றவாளி என பெயரிடப்படவில்லை.அவருக்கு எதிராக எந்த ஆதாரத்தையும் ஏஜென்சியால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
போதைப்பொருள் வழக்கில் ஆர்யன் கான் ஏமாற்றப்பட்டு உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
போதிய ஆதாரம் இல்லாததால் கோர்டேலியா போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஆர்யன் கான், அவின் சாஹு மற்றும் 4 நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மீது வழக்கு எதுவும் இல்லை என போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய சோதனையில் கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி ஆர்யன் கைது செய்யப்பட்டார். மும்பை ஐகோர்ட்டால் கைது செய்யப்பட்ட 25 நாட்களுக்குப் பிறகு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது