'உத்தர பிரதேசத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகள், டிரோன்கள் தயாரிக்கப்பட உள்ளன' - மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்


உத்தர பிரதேசத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகள், டிரோன்கள் தயாரிக்கப்பட உள்ளன - மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்
x

உத்தர பிரதேசம் மற்றும் தமிழகத்தில் பாதுகாப்பு தொழில்துறை வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் நடைபெற்ற கருத்தரங்கில் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-

"மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் பாதுகாப்பு துறை சார்ந்த ஆயுதங்கள், தளவாடங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக உத்தர பிரதேசம் மற்றும் தமிழகத்தில் பாதுகாப்பு தொழில்துறை வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

உத்தர பிரதேச பாதுகாப்பு வழித்தடம் சுமார் 1,700 ஹெக்டேர் பரப்பளவில் அமைகிறது. இதில் 95 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன. இதுவரை சுமார் ரூ16,000 கோடி அளவுக்கு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. இந்த பாதுகாப்பு வழித்தடத்தில் சாதாரண நட்டுகளும், போல்ட்டுகளும் தயாரிக்கப்படாது. அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணைகள், ட்ரோன்கள் தயாரிக்கப்பட உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் ஆயுதங்களின் மூலம் முப்படை களும் நவீனப்படுத்தப்படும்."

இவ்வாறு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.


Next Story