குருத்வாரா பயங்கரவாத தாக்குதல் - பிரதமர் மோடி கண்டனம்


குருத்வாரா பயங்கரவாத  தாக்குதல் - பிரதமர் மோடி கண்டனம்
x

Image Courtesy : PTI 

தினத்தந்தி 18 Jun 2022 10:28 PM IST (Updated: 18 Jun 2022 10:29 PM IST)
t-max-icont-min-icon

பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்

புதுடெல்லி,

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், கர்தே பர்வான் என்ற பகுதியில் சீக்கியர்களின் வழிபாட்டு தலம் என அறியப்படும் குருத்வாரா அமைந்துள்ளது. இதில் இன்று காலை திடீரென பயங்கர வெடிகுண்டு சத்தம் கேட்டது. அங்கு பயங்கரவாதிகளால் இந்திய நேரப்படி, இன்று காலை 8.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.இந்த வெடிகுண்டு தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார் .இது குறித்து மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;

காபூலில் உள்ள கர்தே பர்வான் குருத்வாரா மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தீவிரவாத நடத்தியதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இந்த தாக்குதலை கண்டிப்பதோடு, பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்


Next Story