விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்


விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
x

சாம்ராஜ்நகரில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதனால் 5 பேர் மறுவாழ்வு பெற்றனர்

கொள்ளேகால்;


சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா சிலாகவாடி கிராமத்தை சேர்ந்த நீலப்பசாமி-யசோதாம்மா தம்பதியின் மகன் ராகவா (வயது 34). இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் ராகவா கடந்த மாதம் (ஜூலை) 29-ந்தேதி எலந்தூரில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்தார். அவர் மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி ராகவா, மூளைச்சாவு அடைந்தார். இதுகுறித்து டாக்டர்கள் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். இதனை கேட்டு அவர்கள் கதறி அழுதனர். இதையடுத்து ராகவாவின் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர்.

இதுகுறித்து அவர் டாக்டர்களிடமும் தெரிவித்தனர். ராகவாவின் இதையடுத்து ராகவாவின் 2 சிறுநீரகங்கள், கல்லீரல், கரு விழிகள் உள்ளிட்ட உடல் உறுப்புகளை பரிசோதனை செய்து தானமாக பெற்று கொண்டனர்.

இதையடுத்து தனியார் மருத்துவமனை டாக்டர்கள், மாநிலத்தில் உள்ள மற்ற தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 5 பேருக்கு உடல் உறுப்புகள் தேவைப்படுவது தெரியவந்தது. இதையடுத்து மைசூருவில் இருந்து உடல் உறுப்புகள் சம்மந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அவர்களுக்கு ராகவாவின் உடல் உறுப்புகள் பொருத்தப்பட்டன. விபத்தில் மூளைச்சாவு அடைந்த ராகவாவின் உடல் உறுப்புகள் மூலம் 5 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.


Next Story