பாஜக அன்னா ஹசாரேவை வைத்து அரசியல் செய்கிறது - அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு


பாஜக அன்னா ஹசாரேவை வைத்து அரசியல் செய்கிறது - அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
x

சி.பி.ஐ. சோதனையில் எதுவும் கிடைக்காததால் அன்னா ஹசாரேவை பா.ஜனதா பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி அரசின் கலால் கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி துணை முதல்-மந்திரியுமான மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

டெல்லி அரசியலில் சி.பி.ஐ. சோதனை, விசாரணை, சிறப்பு சட்டசபை கூட்டம் என்ற பரபரப்புக்கு இடையில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ஆரம்ப காலத்தில் தன்னை பின் பற்றி வந்த அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்து உள்ளார். அதிகார போதையில் இருப்பதாக அவர் 2 பக்கங்களுக்கு கெஜ்ரிவாலை விமர்சித்து கடிதம் எழுதியுள்ளார். இதற்கு டெல்லி முதல்- மந்திரியும், ஆம் ஆத்மி தலைவருமான கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார். சி.பி.ஐ. சோதனையில் எதுவும் கிடைக்காததால் அன்னா ஹசாரேவை பா.ஜனதா பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்து இருப்பதாக பா.ஜனதாவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் சி.பி.ஐ. விசாரணையில் ஊழல் நடைபெறவில்லை என்று தெரியவந்துள்ளது. ஆனாலும் மக்கள் பாஜகாவை நம்பவில்லை. பிரபலமான ஒருவரை வைத்து தனி நபர் தாக்குதல் நடத்துவது அரசியலில் பொதுவானது தான். பா.ஜனதாவும் தற்போது அன்னா ஹசாரேயை வைத்து அதைத்தான் செய்கிறது. இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


Next Story