சாதி, மதம் அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்த பா.ஜனதா முயற்சி - லாலு பிரசாத் யாதவ் குற்றச்சாட்டு


சாதி, மதம் அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்த பா.ஜனதா முயற்சி - லாலு பிரசாத் யாதவ் குற்றச்சாட்டு
x

சாதி, மதம் அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்த பா.ஜனதா முயற்சி என்று லாலு பிரசாத் யாதவ் குற்றச்சாட்டினார்.

பீகாரில் ஆளும் மகா கூட்டணி சார்பில் பர்னியாவில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் டெல்லியில் இருந்தவாறு காணொலி மூலம் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், 'பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் சிறுபான்மையினர் மற்றும் சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்கு எதிராக உள்ளன. 2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2025-ம் ஆண்டு மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதாவை நாங்கள் (மகா கூட்டணி) வீழ்த்துவோம்' எனக்கூறினார். பா.ஜனதா தலைமையிலான அரசு சாதி, மதம் அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய லாலு பிரசாத் யாதவ், இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வரவும், அரசியல் சாசனத்தை திருத்தவும் பா.ஜனதாவும் ஆர்.எஸ்.எஸ்.சும் முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

தங்கள் போராட்டம் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்துக்கு எதிரானது என்றும், இதில் பீகார் முன்முயற்சி எடுத்துள்ளது என்றும் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார்.


Next Story