மராட்டியத்தில் 2 மாத குழந்தையுடன் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ.
நமீதா முன்டாடா எம்.எல்.ஏ. தனது குழந்தையுடன் சட்டசபைக்கு வந்து பட்ஜெட் கூட்டத்தொடர் நடவடிக்கைகளில் கலந்து கொண்டார்.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 27-ந்தேதி பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளன்று, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. சரோஜ் அஹிரே தனது 4 மாத குழந்தையுடன் சட்டசபைக்கு வருகை தந்து கூட்டத்தொடரில் கலந்து கொண்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
இந்த நிலையில், இன்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. நமீதா முன்டாடா, தனது 2 மாத குழந்தையுடன் சட்டசபைக்கு வருகை தந்தார். மராட்டிய சட்டசபையில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை பராமரிப்பதற்காக 'ஹிர்கானி அறை' என்ற தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று நமீதா முன்டாடா எம்.எல்.ஏ. தனது குழந்தையுடன் சட்டசபைக்கு வந்து பட்ஜெட் கூட்டத்தொடர் நடவடிக்கைகளில் கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரது ஆதரவாளரகள் சமுக வலைதளங்களில் பகிர்ந்து மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.