பண்ணைவீட்டில் விபசார விடுதி; 500 ஆணுறைகள், 400மதுபான பாட்டில்கள் சிக்கிய பா.ஜ.க. தலைவர்


பண்ணைவீட்டில் விபசார விடுதி; 500 ஆணுறைகள், 400மதுபான பாட்டில்கள்  சிக்கிய பா.ஜ.க. தலைவர்
x
தினத்தந்தி 27 July 2022 10:44 AM IST (Updated: 27 July 2022 11:08 AM IST)
t-max-icont-min-icon

பண்ணைவீட்டில் 500 ஆணுறைகள், 400மதுபான பாட்டில்கள் ; 5 சிறுமிகள் உள்பட 23 பெண்கள் பாலியல் தொழில் நடத்தியதாக மேகாலயா பா.ஜனதா தலைவர் கைது செய்யப்பட்டார்.

புதுடெல்லி

மேகாலயா பா.ஜனதா துணைத் தலைவர் பெர்னார்ட் என். மரக்.மரக், கேரா ஹில்ஸ் பகுதியின் சுயாதீன மாவட்ட கவுன்சிலின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் இருக்கிறார். இவருக்கு மேகாலயா மாநிலத்தின் மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தின் துராவில் ஒரு பண்ணை வீடு உள்ளது. பண்ணி வீட்டில் விசார விடுதி நடத்தபடுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் மரக்கின் பண்ணை வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு இருந்து 23 பெண்கள், 73 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், அங்கிருந்து ஐந்து சிறுமிகளையும் போலீசார் மீட்டனர். பண்ணை வீட்டில் போலீஸ் சோதனை நடந்தபோது மரக் தலைமறைவாகி விட்டார்.

அந்த பண்ணை வீட்டில் இருந்து 400 மதுபான பாட்டில்கள் மற்றும் 500 ஆணுறைகள் அடங்கிய பெட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 'ரிம்பு பாகன்' என்ற மரக்கின் பண்ணை வீட்டில் டஜன் கணக்கான கார்கள் இருந்தன.

பண்ணை வீட்டில் விபாசார விடுதி நடத்தியதாக போலீசார் மரக்கை உத்தர பிரதேசத்தின் ஹாபூர் மாவட்டத்தில் கைது செய்தனர்.

கைதாகியுள்ள பெர்னார்ட் மரக் மீது ஆள் கடத்தலில் ஈடுபட்டது உள்பட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2000ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் அவர் மீது வட கிழக்கு மாநிலங்களின் பல்வேறு இடங்களில் 25க்கும் அதிகமான குற்றவியல் வழக்குகள் பதிவாகியிருந்தன.

பெர்னார்ட் மரக்கை குறி வைத்து அவரது பண்ணை வீட்டில் போலீசார் சோதனை நடத்திய நடவடிக்கையை மாநில பா.ஜனதா கட்சி கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. மூன்று மாடி கட்டடத்தில் கீழ்தளம் நிகழ்ச்சிகளை நடத்தவும் முதல் தளத்தில் உள்ள 30 அறைகள் குடியிருப்புவாசிகள் வசிக்கவும், இரண்டாம் தளத்தில் ஆதரவற்றோர் தங்கும் விடுதியும் செயல்பட்டு வந்ததாக பா.ஜனதா அறிக்கையில் கூறி உள்ளது.கொரோனா காலத்தில் இருந்தே அந்த விடுதியில் சிறார்கள் உள்பட இளைஞர்கள் தங்கி வந்ததாகவும் அவர்களுக்கு நிதி ரீதியாக ஆதரவு அளித்து வந்தவர் பெர்னார்ட் மரக் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story