"மக்களின் உரிமைகள் மீது பா.ஜ.க. தாக்குதல் நடத்துகிறது" - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே


மக்களின் உரிமைகள் மீது பா.ஜ.க. தாக்குதல் நடத்துகிறது - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே
x

மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட்டால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்தார்.

புதுடெல்லி,

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே பொறுப்பேற்ற பிறகு, காங்கிரஸ் வழிநடத்தல் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகேல், மாநிலங்களவை எம்.பி. பா.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜுன் கார்கே, பா.ஜ.க. அரசு நாட்டு மக்கள் மீதும், அவர்களது உரிமைகள் மீதும் தாக்குதல் நடத்தி வருவதாகவும், மக்களை பாதுகாப்பது காங்கிரசின் பொறுப்பு என்றும் கூறினார். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட்டால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story