70 ஆண்டுகளில் பழங்குடியினருக்கு சம பிரதிநிதித்துவம் அளித்த கட்சி பா.ஜ.க.: ஜே.பி. நட்டா பேச்சு


70 ஆண்டுகளில் பழங்குடியினருக்கு சம பிரதிநிதித்துவம் அளித்த கட்சி பா.ஜ.க.:  ஜே.பி. நட்டா பேச்சு
x

நாட்டில் 70 ஆண்டுகளில் பழங்குடி மக்களுக்கு பா.ஜ.க.வை தவிர ஒருவரும் சம பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை என ஜே.பி. நட்டா பேசியுள்ளார்.



பல்லாரி,


கர்நாடகாவின் பல்லாரி மாவட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பொது பேரணி ஒன்றில் கலந்து கொண்டு இன்று பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் முன் உரையாற்றினார்.

அவர் பேசும்போது, நாட்டில் கடந்த 70 ஆண்டுகளில் பழங்குடியின மக்களை பற்றி பா.ஜ.க.வை தவிர ஒருவரும் கவனம் கொள்ளவில்லை. அவர்களுக்கு பா.ஜ.க.வை தவிர ஒருவரும் சம பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை.

முதன்முறையாக பழங்குடி பெண் ஒருவரை பா.ஜ.க. இந்தியாவின் ஜனாதிபதியாக ஆக்கியுள்ளது என்று பேசியுள்ளார். பழங்குடி சமூகத்தினரின் முன்னேற்றத்திற்கு தற்போது ஆட்சியில் உள்ள பா.ஜ.க. அரசு தன்னை அர்ப்பணித்து உள்ளது.

வீட்டு வசதி, கல்வி, சுகாதாரம் மற்றும் பழங்குடியினருக்கான உதவி தொகை மற்றும் ஏகலைவ வித்யாலயா உள்பட ஒவ்வொரு திட்டத்திலும் பழங்குடியினருக்கு பா.ஜ.க. அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என அவர் பேசியுள்ளார்.


Next Story