"ஆண்களின் செக்ஸ் உணர்வை பாதிக்கின்றன" பிரியாணி கடைகளை மூட வலியுறுத்திய முன்னாள் மந்திரி


ஆண்களின் செக்ஸ் உணர்வை பாதிக்கின்றன பிரியாணி கடைகளை மூட வலியுறுத்திய முன்னாள் மந்திரி
x

'பிரியாணி மசாலாக்கள் ஆண்களின் செக்ஸ் உணர்வை குறைக்கின்றன' என மேற்குவங்காளத்தில் பிரியாணி கடைகளை மூடுமாறு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் கட்டாயப்படுத்தி வருகிறார்.

கொல்கத்தா

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ரவீந்திர நாத் கோஷ். மம்தா பானர்ஜி தலைமையிலான அரசாங்கத்தின் முன்னாள் மந்திரி ஆவார். இவர் மேற்குவங்காளத்தின் கூச் பெஹாரில் உள்ள இரண்டு உள்ளூர் பிரியாணி கடைகளை மூடுமாறு கட்டாயப்படுத்தினார்.

பிரியாணி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் மசாலாப் பொருட்கள் ஆண்களின் செக்ஸ் ஆர்வத்தைக் குறைப்பதாக பலரிடமிருந்து குற்றச்சாட்டுகள் வருகின்றன என்று அவர் குற்றஞ்சாட்டினார்.

இதுகுறித்து கோஷ் கூறியதாவது:-

ஆணின் செக்ஸ் உணர் பாதிக்கும் பிரியாணிக்கு எந்த மசாலாப் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று தெரியவில்லை என்று அப்பகுதி மக்களிடம் இருந்து கடந்த பல நாட்களாக புகார்கள் வந்துள்ளன.

பீகார், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அப்பகுதியில் பிரியாணி விற்பனை செய்து வருகின்றனர். உரிமம் இல்லாமல் கடைகள் இயங்குவதாகவும் கூச் பெஹார் நகராட்சியின் தற்போதைய தலைவர் குற்றம் சாட்டி உள்ளார்.

அனைத்து புகார்களுக்குப் பிறகு, நாங்கள் இங்கு வந்து பார்த்தோம், கடைகளுக்கு வர்த்தக உரிமம் இல்லை. எனவே கடைகள் மூடப்பட்டன என கூறினார்.


Next Story