சீற்றம் குறையாத பிபர்ஜாய் புயல் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


சீற்றம் குறையாத பிபர்ஜாய் புயல் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
x

புயல் கரையை கடந்த பின்னரும், வலுவிலக்காமல் ராஜஸ்தானை நோக்கி நகர்வதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அகமதாபாத்,

10 நாட்களுக்கும் மேலாக அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த பிபர்ஜாய் புயல் நேற்றுமுன் தினம் மாலை 4.30 மணியளவில் குஜராத்தின் கட்ச் மாவட்டம் மாண்ட்விக்கும், பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே குஜராத்தின் ஜகாவு துறைமுகம் அருகே கரையை கடக்க தொடங்கியது.

பிபர்ஜாய் புயலின் கண் சுமார் 50 கி.மீ. விட்டம் கொண்டது. இது மணிக்கு 13 முதல் 14 கி.மீ. வேகத்தில் முன்னேறியது. இதனால் புயலின் கண் பகுதி கரையை கடக்க நள்ளிரவு வரை ஆனது.

புயலின் கண் பகுதி கரையை நெருங்க நெருங்க மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. அசுர வேகத்தில் வீசிய காற்றுக்கு முன் மரங்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. எனவே அவை அடுத்தடுத்து வேருடன் சாய்ந்தன.

அந்தவகையில் கட்ச், தேவ்பூமி துவாரகா மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்தன. மேலும் ஏராளமான மின்கம்பங்கள், செல்போன் கோபுரங்களும் சரிந்தன. இதைப்போல வீடுகளின் தகர ஷீட் கூரைகள் காற்றில் பறந்தன. குடிசை வீடுகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. அத்துடன் மரங்கள் விழுந்ததில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.

அதேசமயம் புயல் கரையை கடந்த பின்னரும், வலுவிலக்காமல் ராஜஸ்தானை நோக்கி நகர்வதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தெற்கு ராஜஸ்தான் பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.



Next Story