அலுவலகத்தில் பொய் சொல்லிவிட்டு ஐ.பி.எல். போட்டியை காண சென்ற பெண் - காட்டிக்கொடுத்த நேரலை ஒளிபரப்பு


அலுவலகத்தில் பொய் சொல்லிவிட்டு ஐ.பி.எல். போட்டியை காண சென்ற பெண் - காட்டிக்கொடுத்த நேரலை ஒளிபரப்பு
x
தினத்தந்தி 9 April 2024 4:23 PM IST (Updated: 9 April 2024 4:26 PM IST)
t-max-icont-min-icon

அலுவலகத்தில் பொய் சொல்லிவிட்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை பார்க்க சென்ற பெண், மேலாளரிடம் வசமாக சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு,

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில்,

வீட்டில் அவசர வேலை இருப்பதாக பொய் சொல்லிவிட்டு லக்னோ-பெங்களூரு அணிகள் மோதிய ஐ.பி.எல் போட்டிக்கு சென்ற போது, நேரலை ஒளிபரப்பில் வந்ததால் நேஹா என்ற பெண் அவர் வேலை செய்யும் நிறுவனத்தின் மேலாளரிடம் வசமாக சிக்கிக்கொண்டார். இது குறித்து விசாரித்த நிறுவனத்தின் மேலாளர் நீங்கள் ஆர்.சி.பி ரசிகைதானே. போட்டி தோல்வியில் முடிந்ததால் நீங்கள் வருந்தியதை நான் டிவியில் பார்த்தேன் என கிண்டலாக கூறியுள்ளார்.

இது குறித்து அந்த பெண் இன்ஸ்டாகிராம் பதிவில்,

லக்னோ-பெங்களூரு அணிகள் மோதிய போட்டியை நேரலையில் பார்க்க சென்றபோது, தனது மேலாளர் என்னை டி.வி.,யில் பார்த்ததாகவும், நீங்கள் ஆர்.சி.பி. ரசிகையா என்று கேட்டார், அதற்கு அவர் ஆம் என்று கூறியதாகவும் தெரிவித்தார். போட்டி தோல்வியில் முடிந்ததால் நீங்கள் கவலையுடன் அரங்கில் இருந்து வெளியேறியதை நான் பார்த்தேன் என்று தனது மேலாளருடன் நடந்த அரட்டையின் ஸ்கிரீன் ஷாட்டை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இது இணையத்தில் வைரலாகி வருகிறது.



Next Story