ஆந்திராவில் நடந்த கார் விபத்தில் பெங்களூரு சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் சாவு


ஆந்திராவில் நடந்த கார் விபத்தில்  பெங்களூரு சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் சாவு
x

ஆந்திராவில் நடந்த கார் விபத்தில் பெங்களூரு சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் பலியானார்கள். போதைப்பொருட்கள் விற்கும் கும்பலை பிடிக்க சென்ற போது இந்த பரிதாபம் நடந்துள்ளது.

பெங்களூரு: ஆந்திராவில் நடந்த கார் விபத்தில் பெங்களூரு சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் பலியானார்கள். போதைப்பொருட்கள் விற்கும் கும்பலை பிடிக்க சென்ற போது இந்த பரிதாபம் நடந்துள்ளது.

போதைப்பொருட்கள் விற்கும் கும்பலை...

பெங்களூரு சிவாஜிநகர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் அவினாஷ் (வயது 29). அதே போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றியவர்கள் தீக்சித், அனில் முலிக் (28). இவர்கள் மற்றும் போலீஸ்காரர் சரண பசவா ஆகிய 4 பேரும் பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபர்களை பிடிக்கவும், அதுபற்றி விசாரணை நடத்துவதற்காகவும் ஆந்திரா மாநிலத்திற்கு சென்றனர்.

ஆந்திரா மாநிலத்தில் சித்தூர் புறநகர் பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் அவர்கள் 2 காரில் சென்று கொண்டு இருந்தார்கள். போலீஸ்காரர்கள் சென்ற கார் தனியாருக்கு சொந்தமானதாகும். அந்த காரை குண்டக்கல் பகுதியை சேர்ந்த மேக்ஸ்வெல் ஓட்டி சென்றார். சித்தூர் அருகே கார் சென்ற போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு சுவரில் மோதி பல்டி அடித்து கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.

2 போலீசார் சாவு

இந்த விபத்தில் கார் முழுவதும் நொறுங்கி உருக்குைலந்து ேபானது. இதனால் காரில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் அவினாஷ், போலீஸ்காரர் அனில் முலிக் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்கள். கார் டிரைவரான மேக்ஸ்வெல்லும் இந்த விபத்தில் பலியானார்.

இந்த விபத்தில் காயம் அடைந்த போலீஸ்காரர் சரண பசவா, தீக்சித் ஆகிய போலீஸ்காரர்களும் படுகாயத்துடன் ஆந்திராவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.

பீதர் மாவட்டத்ைத ேசர்ந்தவர்

அவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி ஆந்திர மாநில போலீசாரை தொடர்பு கொண்டு, பெங்களூரு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். விபத்தில் பலியான சப்-இன்ஸ்பெக்டர் அவினாஷ் 3 ஆண்டுக்கு முன்பு தான் பணியில் சேர்ந்திருந்தார். அவரது சொந்த ஊர் பீதர் மாவட்டம் பசவ கல்யாண் தாலுகா அரகூடு கிராமம் ஆகும்.

விபத்து நடந்ததும் சிவாஜிநகர் போலீஸ் நிலையத்திற்கு சென்ற கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் பீமாசங்கர் குலேத், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிகுமாரிடம், 2 போலீஸ்காரர்கள் பற்றிய தகவல்களை கேட்டு பெற்றுக் கொண்டார். அவர்களது குடும்பத்தினரையும் தொடர்பு கொண்டு பீமாசங்கர் குலேத் பேசினார்.

போலீஸ் மந்திரி இரங்கல்

இந்த விபத்து குறித்து போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா நிருபர்களிடம் கூறுகையில், ஆந்திர மாநிலத்திற்கு போதைப்பொருட்கள் விற்கும் கும்பலை பிடிக்க சென்ற பெங்களூரு போலீசார் 2 பேர், அங்கு நடந்த கார் விபத்தில் சிக்கி பலியாகி இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

பலியான போலீஸ்காரர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவர்களது குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்கும், என்றார்.


Next Story