அமேசான் ஆர்டரில் உயிருடன் டெலிவரி செய்யப்பட்ட நாகப்பாம்பு - வீடியோ வைரல்


அமேசான் ஆர்டரில் உயிருடன் டெலிவரி செய்யப்பட்ட நாகப்பாம்பு - வீடியோ வைரல்
x

அமேசான் பார்சலில் இருந்து பாம்பு வெளிவந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பெங்களூரு,

பெங்களூரு சர்ஜாபூரை சேர்ந்த ஐ.டி. தம்பதியர், அமேசான் தளத்தில் எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலரை ஆர்டர் செய்துள்ளனர். நேற்று மாலை அவர்களுக்கு இந்த பேக்கேஜ் டெலிவரி செய்யப்பட்டிருந்தது. அதை பிரித்த போது அதில் நாகப்பாம்பு இருந்துள்ளது. நல்ல வேளையாக பார்சலில் பாம்பு இருப்பதை கவனித்த காரணத்தால் அதை முழுவதுமாக அவர்கள் பிரிக்கவில்லை. இருந்தும் அந்த பார்சலில் இருந்து பாம்பு வெளிவர முயன்றுள்ளது. ஆனால் அதில் ஒட்டப்பட்டிருந்த டேப்பில் அதில் சிக்கிக் கொண்டுள்ளது.

இதைப் பார்த்து முதலில் பதறிய அவர்கள், பின்னர் அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அந்த பாம்பை அவர்கள் பிடித்து சென்றனர்.

அந்த வீடியோ வைரலான நிலையில், அமேசான் நிறுவனம் அந்த வாடிக்கையாளருக்கு பதில் தந்துள்ளது. "சிரமத்துக்கு வருந்துகிறோம். நாங்கள் அதை சரி பார்த்திருக்க வேண்டும். ஆர்டர் குறித்த விவரத்தை இந்த லிங்கில் பதிவேற்றவும். அப்டேட் உடன் எங்கள் குழு உங்களை தொடர்பு கொள்ளும்" என அமேசான் தெரிவித்துள்ளது.


Next Story