பெங்களூரு: பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு
பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,
இந்திய நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று 88 தொகுதிகளில் நடைபெற்றது. இதில் கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளில் ,14 தொகுதிகளுக்கு மட்டும் முதல்கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது.
இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது ஜெயநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு தெற்கு தொகுதியில் 80% பாஜகவினர், 20% காங்கிரஸ் கட்சியினர் உள்ளதாகவும், 80% உள்ள பாஜகவினர் 20% தான் வாக்களிக்கின்றனர், ஆனால் 20% உள்ள காங்கிரஸ் கட்சியினர் 80% வாக்களிப்பதாக டுவிட்டரில் வீடியோ பதிவிட்டிருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story