பசவராஜ் பொம்மை டெல்லி பயணம்


பசவராஜ் பொம்மை டெல்லி பயணம்
x

மந்திரிசபை விரிவாக்கம் மேல்-சபை தேர்தல் குறித்து விவாதிக்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை டெல்லி சென்றார்.

பெங்களூரு

மந்திரிசபை விரிவாக்கம் மேல்-சபை தேர்தல் குறித்து விவாதிக்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை டெல்லி சென்றார்.

மந்திரிசபை விரிவாக்கம்

கர்நாடக மந்திரிசபையில் 5 இடங்கள் காலியாக உள்ளன. அந்த காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பா.ஜனதா மூத்த எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வருகிறார்கள். மந்திரிசபையை மாற்றி அமைக்க பா.ஜனதா மேலிடம் ஆலோசித்து வருகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் பெங்களூரு வந்த உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார்.

டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் ஆலோசித்து மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முடிவு எடுப்பதாகவும், அப்போது தாங்கள் டெல்லி வர வேண்டும் என்று அமித்ஷா கூறியதாக பசவராஜ் பொம்மை தெரிவித்தார். அடுத்த சில நாட்களில் மந்திரிசபை விரிவாக்கத்திற்கு அனுமதி கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் 18 நாட்கள் ஆகியும் இதுவரை மந்திரிசபை விரிவாக்கத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை.

மேல்-சபை தேர்தல்

இதற்கிடையே கர்நாடக மேல்-சபையில் 11 இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. இதில் யாருக்கு டிக்கெட் வழங்குவது என்பது குறித்து ஆலோசிப்பதற்காக பசவராஜ் பொம்மை நேற்று மதியம் 2.55 மணிக்கு பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்து மந்திரிசபை விரிவாக்கம் மற்றும் மேல்-சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்.


Next Story