பூரி ஜெகந்நாதர் கோவில் கருவறையை வீடியோ எடுத்து வெளியிட்ட வங்காளதேச வாலிபர் - போலீஸ் விசாரணை


பூரி ஜெகந்நாதர் கோவில் கருவறையை வீடியோ எடுத்து வெளியிட்ட வங்காளதேச வாலிபர் - போலீஸ் விசாரணை
x

பூரி ஜெகந்நாதர் கோவில் கருவறையை வங்காளதேச வாலிபர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூரி,

ஒடிசா மாநிலம் பூரியில் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோவில் உள்ளது. 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலினுள் கேமரா, செல்போனை கொண்டு செல்லவும், படம் எடுக்கவும் கண்டிப்பான தடை உள்ளது.

இந்நிலையில் இக்கோவிலின் கருவறையில் உள்ள சாமி சிலைகளின் வீடியோ படம் நேற்று முன்தினம் சமூக வலைதளத்தில் வௌியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த வீடியோவை வெளியிட்டவர், வங்காளதேச நாட்டைச் சேர்ந்த வாலிபரான ஆகாஷ் சவுத்ரி என தெரியவந்தது. அவர் அந்த வீடியோவில் வங்காள மொழியில் குறிப்புகளையும் வெளியிட்டிருக்கிறார்.

'யூடியூப்'பில் தொடர்ந்து வீடியோ வெளியிடும் நபரான அந்த வங்காளதேச வாலிபர், ஒரு கிருஷ்ண பக்தர் எனவும் கூறப்படுகிறது.

அவர் மீது ஜெகந்நாதர் கோவில் நிர்வாகம் நேற்று அளித்த புகாரின் போில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சமூக வலைதளத்தில் வெளியான கர்ப்பகிரக வீடியோ அழிக்கப்பட்டது.

கடந்த 2017-ம் ஆண்டிலும் இதுபோல பூரி ஜெகந்நாதர் கோவிலின் கர்ப்பகிரக புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பானது குறிப்பிடத்தக்கது.


Next Story