சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடந்தால் உடனடி நடவடிக்கை : வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா
வங்காளதேசம் ஒரு மதச்சார்பற்ற நாடு என்று வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்தார்.
டாக்கா,
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தில் சமீப காலமாக அங்கு சிறுபான்மை இன மக்களாக வசித்து வரும் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, " வங்காளதேசம் ஒரு மதச்சார்பற்ற நாடு என்றும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்
.மேலும் பயங்கரவாதம் வங்காளதேசத்தில் மட்டும் இல்லை என்றும் பல நாடுகளில் ஏன் இந்தியாவில் கூட இருப்பதாகவும் தெரிவித்த ஷேக் ஹசீனா, பயங்கரவாதம் அதிகரிக்க சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் தற்போது இது மிக மிக மோசமாக மாறிவிட்டதாகவும் தனது கவலையை வெளிப்படுத்தினார்.
Related Tags :
Next Story