திறந்தவெளி கழிவறையாக மாறிவரும் பங்காருபேட்டை


திறந்தவெளி கழிவறையாக மாறிவரும் பங்காருபேட்டை
x
தினத்தந்தி 12 Sept 2023 12:15 AM IST (Updated: 12 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோலார் மாவட்டம் பங்காருபேட்டைக்கு உட்பட்ட பகுதியில் திறந்தவெளி கழிவறையாக மாறிவருகிறது.

பங்காருபேட்டை

கோலார் மாவட்டம் பங்காருபேட்டை புரசபைக்கு உட்பட்ட பகுதியில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். குறிப்பாக புலம்பெயர்ந்த மக்கள் தான் அதிக அளவில் வசித்து வருகிறார்கள்.

பங்காருபேட்டை டவுனில் உள்ள மார்க்கெட், பஜார் ரோடு, பஸ் நிலைய பகுதி ஆகியவை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் புரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் பொது கழிவறைகள் இல்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ரெயில் நிலைய பின்புற பகுதி, பஸ் நிலைய பகுதி, கெரேகட்டே பகுதி, கரஹள்ளி சர்க்கிள், கெரேகோடி ஆகிய பகுதிகள் திறந்தவெளி கழிவறைகளாக மாறி வருகின்றன.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு தாலுகா பஞ்சாயத்து அலுவலகம் எதிரே ஒரு பொது கழிவறை கட்டப்பட்டது. ஆனால் அது இதுவரையில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் திறந்தவெளியை இயற்கை உபாதைகளை கழிக்க பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

அதனால் பொது இடங்களில் பொது கழிவறைகளை திறக்க புரசபை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story