ஜம்மு-காஷ்மீரில் 12 மாவட்டங்களுக்கு பனிச்சரிவு அபாய எச்சரிக்கை


ஜம்மு-காஷ்மீரில் 12 மாவட்டங்களுக்கு பனிச்சரிவு அபாய எச்சரிக்கை
x

ஜம்மு-காஷ்மீரில் உள்ள 12 மாவட்டங்களுக்கு பனிச்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரில் தற்போது கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. மேலும் வெப்பநிலை உறைநிலைக்கு கீழ் பதிவாகி வருவதால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பனிப்பொழிவு காரணமாக பல இடங்களில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள 12 மாவட்டங்களுக்கு பனிச்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குப்வாரா மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் அதிக அபாயம் கொண்ட பனிச்சரிவு ஏற்படலாம் என கூறப்பட்டுள்ளது.

அதே போல் அனந்த்நாக், பந்திபோரா, பராமுல்லா, தோடா, கந்தர்பால், கிஸ்ட்வர், குல்கம், பூஞ்ச், ரஜவுரி, ரம்பன் மற்றும் ரீசி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த அபாய அளவிலான பனிச்சரிவுகள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story