இளம்பெண் பலாத்கார முயற்சி: தூர்தர்ஷன் ஊழியருக்கு 3 ஆண்டு சிறை
இளம்பெண்ணை பலாத்காரம் செய்த முயன்ற வழக்கில் தூர்தர்ஷன் ஊழியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து உடுப்பி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
உடுப்பி-
இளம்பெண்ணை பலாத்காரம் செய்த முயன்ற வழக்கில் தூர்தர்ஷன் ஊழியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து உடுப்பி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
தூர்தர்ஷன் அலுவலகம்
உடுப்பி டவுன் பகுதியில் தூர்தர்ஷன் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நிட்டூரை சேர்ந்த பாலகிருஷ்ணா என்பவர் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் கடந்த 2014-ம் ஆண்டு பாலகிருஷ்ணா தூர்தர்ஷன் அலுவலகத்திற்கு பணிக்கு சென்றார். அப்போது அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் அங்கு பணிபுரியும் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனை பாலகிருஷ்ணா பார்த்தார். அப்போது அவர் 2 பேரும் உல்லாசமாக இருப்பதை வீடியோ, புகைப்படம் எடுத்துள்ளார். இதையடுத்து பாலகிருஷ்ணா அங்கிருந்து சென்றார். பின்னர் அந்த புகைப்படத்தை கோபால் என்பவருக்கு பாலகிருஷ்ணா அனுப்பியுள்ளார்.
இந்தநிலையில் அந்த புகைப்படத்தை கோபால் சமூகவலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். இதனை இளம்பெண் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்தநிலையில், இளம்பெண் பாலகிருஷ்ணாவை தொடர்பு கொண்டு பேசினார். அதில் பேசிய அவர் தனது வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். அதன்படி இளம்பெண் பாலகிருஷ்ணா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு கோபால் மற்றும் பாலகிருஷ்ணாவும் இருந்துள்ளனர்.
பலாத்காரம் முயற்சி
அப்போது அவர்கள் 2 பேரும் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அவர்களிடம் இருந்து தப்பி சென்றார். இதுகுறித்து இளம்பெண் உடுப்பி போலீசில் புகார் அளித்தார். அதன்போில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணா, கோபால் ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் அவர்கள் 2 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இதற்கிடையே கோபால் இறந்து விட்டார். இதுதொடர்பான வழக்கு உடுப்பி மாவட்ட கூடுதல் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது.
உடுப்பி போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி ஷயாம் சுந்தர் தீர்ப்பு கூறினார்.
3 ஆண்டு சிறை
அதில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் பாலகிருஷ்ணாவுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.