உப்பள்ளியில் போலீஸ்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய 20பேர் மீது வழக்கு


உப்பள்ளியில் போலீஸ்காரர்கள் மீது தாக்குதல்  நடத்திய 20பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 2 Aug 2023 6:45 PM (Updated: 2 Aug 2023 6:45 PM)
t-max-icont-min-icon

உப்பள்ளியில் போலீஸ்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய 20பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உப்பள்ளி-

தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா அகடி கிராமத்தில் காசு வைத்து சூதாட்டம் நடப்பதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்போில் போலீஸ்காரர்களான திம்மண்ணா மற்றும் மகான்தேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு 20 போ் கொண்ட கும்பல் காசு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனா்.

அந்த கும்பலை 2 போலீஸ்காரர்களும் பிடிக்க முயன்றனர். அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல் போலீஸ்காரர்களான திம்மண்ணா மற்றும் மகான்தேசை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த உப்பள்ளி டவுன் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து உப்பள்ளி போலீசார் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story