சொத்துகுவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
சொத்துகுவிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.
புதுடெல்லி,
சொத்துகுவிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு கடந்த மாதம் விசாரித்தது.
அந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவில், கடந்த 2016, 2021-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தில் வேலுமணி தாக்கல் செய்த சொத்து கணக்குகளின் அடிப்படையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்த சொத்துகளுக்கு அவரிடம் விளக்கம் கேட்டபிறகுதான் வழக்குப்பதிவு செய்ய முடியும் என்கிற வாதத்தை ஏற்க முடியாது என்பதால், இந்த வழக்கில் தலையிட எவ்வித காரணமும் இல்லை என கூறி தள்ளுபடி செய்து கடந்த மாதம் 30-ந்தேதி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில், சொத்துகுவிப்பு வழக்கை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு என எதிர்பார்க்கப்படுகிறது.