சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு: மத்தியப் பிரதேசத்தில் 71.16 சதவீதமும், சத்தீஷ்காரில் 68.15 சதவீத வாக்குகளும் பதிவு
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் இந்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது.
சத்தீஷ்காரின் 20 தொகுதிகளுக்கு கடந்த 7 ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், மத்திய பிரதேசத்தின் 230 தொகுதிகளுக்கும், சத்தீஷ்காரின் மீதமுள்ள 70 தொகுதிகளுக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் நடைபெற்றது. மத்தியப் பிரதேசத்தில் 71.16 சதவீத வாக்குகளும், சத்தீஷ்காரில் 68.15 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
Live Updates
- 17 Nov 2023 6:38 AM IST
சத்தீஷ்காரில் 2-ம் கட்ட தேர்தல்
சத்தீஷ்காரில் 22 மாவட்டங்களில் பரவியுள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. அதேநேரம் நக்சலைட்டு தாக்கம் நிறைந்த ராஜிம் மாவட்டத்தின் பிந்த்ரனாவாகர் தொகுதியின் 9 வாக்குச்சாவடிகளில் மட்டும் காலை 7 முதல் பிற்பகல் 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த தொகுதிகளில் பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் சுயேச்சைகள் என 958 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 130 பெண்கள் மற்றும் ஒரு திருநங்கை வேட்பாளரும் அடங்குவர். இன்றைய தேர்தலில் வாக்களிக்க தகுதி வாய்ந்த வாக்காளர்கள் 1.63 கோடி ஆகும். இதில் 81.41 லட்சம் ஆண்கள் மற்றும் 81.72 லட்சம் பெண்களும் அடங்குவர். இவர்கள் வாக்களிப்பதற்காக 18,833 வாக்குச்சாவடிகள் நிறுவப்பட்டு உள்ளன. தேர்தல் பாதுகாப்பு பணிகளில் மாநில போலீசாருடன் இணைந்து மத்திய பாதுகாப்பு படைகளும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
- 17 Nov 2023 6:34 AM IST
காங்கிரஸ் ஆளும் சத்தீஷ்காரில் 2-ம் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. அங்கு 70 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. மாநிலத்தில் ஆட்சியை தக்க வைப்பதற்காக காங்கிரசும், மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக பா.ஜனதாவும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தன.
- 17 Nov 2023 6:34 AM IST
மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் சுயேச்சைகள் என 2,533 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் பா.ஜனதா, காங்கிரசுக்கு அடுத்ததாக பகுஜன் சமாஜ் கட்சி 183 வேட்பாளர்களை களமிறக்கி இருக்கிறது.
சமாஜ்வாடி 71 வேட்பாளர்களையும், ஆம் ஆத்மி 66 வேட்பாளர்களையும், ஐக்கிய ஜனதாதளம் 10 வேட்பாளர்களையும் நிறுத்தி உள்ளது. இவர்களின் அரசியல் எதிர்காலத்தை 5.60 கோடி வாக்காளர்கள் நிர்ணயிக்கின்றனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 2,049 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- 17 Nov 2023 6:32 AM IST
நாட்டின் பெரிய மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க ஆளும் பா.ஜனதா தீவிரமாக போராடி வருகிறது.