75-வது ஆண்டு சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக இந்திய கப்பற்படையின் ஐஎன்எஸ் சுமேதா இந்தோனேஷியாவுக்கு பயணம்!


75-வது ஆண்டு சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக  இந்திய கப்பற்படையின் ஐஎன்எஸ் சுமேதா இந்தோனேஷியாவுக்கு பயணம்!
x

ஐஎன்எஸ் சுமேதா ஆகஸ்ட் 6 வரை, பாலியில் உள்ள தான்ஜூன் பினோவா துறைமுகத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

புதுடெல்லி,

தென்கிழக்கு இந்திய பெருங்கடலில் இந்திய கப்பற்படையின் தொலைதூர பணி ஈடுபாட்டின் ஒரு பகுதியாக, ஐஎன்எஸ் சுமேதா ஆகஸ்ட் 4 முதல் 6 வரை, பாலியில் உள்ள தான்ஜூன் பினோவா துறைமுகத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்தோனேஷிய கப்பற்படையுடன் இணைந்த செயல்பாட்டை மேம்படுத்துதல், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு பாலி பயணம் அமைந்துள்ளது.

இந்த கப்பல் இந்திய சுதந்திர தினம் மற்றும் சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழா கொண்டாட்டம் ஆகியவற்றுடன் இணையும் வகையில், ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகர கடல்பகுதிக்கும் செல்லவிருக்கிறது.

இந்த கப்பல் பாலியில் இருக்கும் போது, இதன் மாலுமிகள் தொழில்முறை ரீதியான கலந்துரையாடலில் ஈடுபடுவார்கள். அந்நாட்டு கப்பல்களை பார்வையிடுவார்கள். இந்தோனேஷிய கப்பற்படை மாலுமிகளுடன் விளையாட்டு நிகழ்வுகளிலும் பங்கேற்பார்கள்.

ஐஎன்எஸ் சுமேதா உள்நாட்டிலேயே கட்டப்பட்ட கப்பற்படையின் கடற்பகுதி ரோந்து கப்பலாகும். விசாகப்பட்டணத்தில் உள்ள இந்திய கப்பற்படையின் கிழக்கு பிரிவின் ஒரு பகுதியாக இந்த கப்பல் உள்ளது.


Next Story