ஆர்யன் கானின் பாஸ்போர்ட்டை அவரிடமே ஒப்படைக்க மும்பை சிறப்பு கோர்ட்டு உத்தரவு
ஆர்யன் கான் பாஸ்போர்ட்டைத் திருப்பி அவரிடமே அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மும்பை,
மும்பையில் கடந்த ஆண்டு சொகுசு கப்பலில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சோதனையில் கப்பலில் போதை விருந்து நடத்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பிறகு அவர் ஜாமினில் வெளியே வந்தார்.
பின்னர் போதுமான ஆதாரம் இல்லாததால் ஆர்யன் கான் மற்றும் 5 பேரை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் கடந்த மே மாதம் விடுவித்தது. ஜாமீன் நிபந்தனைகளின் ஒரு பகுதியாக ஆர்யன் கான் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். பின்னர் தான் விடுவிக்கப்பட்ட பிறகு தனது பாஸ்போர்ட்டை திரும்பி அளிக்கமாறு போதைப்பொருள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டத்தின் கீழ் ஒரு சிறப்பு கோர்ட்டு (NDPS) முன் அவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த கோர்ட்டு ஆர்யன் கான் பாஸ்போர்ட்டைத் திருப்பி அவரிடமே அளிக்க உத்தரவிட்டுள்ளது.