மதுக்கொள்கை தொடர்பான வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன்


மதுக்கொள்கை தொடர்பான வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன்
x

மதுக்கொள்கை தொடர்பான வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நாளை மறுதினம் காலை 11 மணிக்கு நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.

புதுடெல்லி,

கடந்த ஆண்டு டெல்லியில் அமல்படுத்தப்பட்ட புதிய மதுபானக்கொள்கை தொடர்பான வழக்கில், வரும் ஏப்ரல்-16 ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

டெல்லியில் அமல்படுத்தப்பட்ட இந்த புதிய மதுக்கொள்கையின் மூலமாக, தனியார் அமைப்புகள் மதுபானங்களை விற்பனை செய்வதற்கு ஏற்றாற்போல இந்த மதுபானக்கொள்கை இருப்பதாகவும், இதனால் முறைகேடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன எனவும் குற்றம் சாட்டப்பட்டுவந்தது.

இந்த நிலையில், இது தொடர்பாக முறைகேடுகள் நடந்துள்ளன என்று தொடரப்பட்ட வழக்கில், சிபிஐ காவல்துறையினர் ஏற்கனேவே டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு பதவியை இழக்கும் சூழ்நிலையில் இந்த விவகாரம் வந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், ஏப்ரல்-16ஆம் தேதி காலை 11 மணிக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்ப உள்ளது. ஏற்கனவே கோவா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலின் போது, ஆம் ஆத்மி கட்சியினர் பொதுச்சொத்துகளின் மீது, போஸ்டர் ஒட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு 27ஆம் தேதி ஆஜராகுமாறு கோவா காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்மன் குறித்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், தான் நிச்சயம் அங்கு போவதாக கூறியிருந்தார், இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு சம்மன் அனுப்பப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story