சீனாவுடன் மோதல்: தலைமை தளபதி, முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை மந்திரி அவசர ஆலோசனை


சீனாவுடன் மோதல்: தலைமை தளபதி, முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை மந்திரி அவசர ஆலோசனை
x

Image Courtesy: PTI

அருணாச்சலபிரதேச எல்லையில் சீனா படைகள் அத்துமீறி நுழைய முயற்சித்ததால் மோதல் ஏற்பட்டது.

புதுடெல்லி,

அருணாச்சலபிரதேச எல்லையில் தவாங் செக்டார் பகுதியில் கடந்த 9-ம் தேதி இந்திய - சீன படைகள் மோதிக்கொண்டன. இந்த மோதலில் இரு தரப்பிலும் வீரர்கள் காயமடைந்தனர். இந்திய தரப்பில் 15 வீரர்கள் காயமடைந்தனர். சீன தரப்பில் அதிக அளைவ்லான வீரர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோதல் குறித்த தகவலை இந்திய ராணுவம் நேற்று வெளியிட்டது.

இதனிடையே, இமாச்சலபிரதேச எல்லையில் சீன படைகள் மோதலில் ஈடுபட்ட நிலையில் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், எல்லையில் சீன படைகள் மோதலில் ஈடுபட்டது தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த அவரச ஆலோசனையில் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், முப்படை தளபதிகள், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆலோசனையில் சீன எல்லை விவகாரம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க... ஆயுதங்களுடன் 200 சீன வீரர்கள்... தடுத்து நிறுத்திய 50 இந்திய வீரர்கள்... 30 நிமிடங்கள் - எல்லையில் நடந்தது என்ன?


Next Story