ஹஜ் பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன - தெலுங்கானா உள்துறை மந்திரி


ஹஜ் பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன - தெலுங்கானா உள்துறை மந்திரி
x

ஹஜ் பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெலுங்கானா உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்,

ஹஜ் பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கான ஏற்பாடுகளை மறுஆய்வு செய்வதற்கான கூட்டம் தெலுங்கானாவில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில அமைச்சர் கொப்புல ஈஸ்வர், ஹஜ் கமிட்டி தலைவர் மற்றும் ஆந்திரப்பிரதேச தலைவர் மற்றும் செயலாளர்கள் உட்பட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய தெலுங்கானா உள்துறை மந்திரி மகமது அலி ஹஜ் பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என்று கூறினார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:-

ஹாஜிகள் திரும்பி வரும் வரை அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வருகையின் போது ஹாஜிகளுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அதைத் தீர்க்க அதிகாரிகள் இருப்பார்கள்.

தெலுங்கானாவில் உள்ள ஹாஜிகளுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆந்திராவிலிருந்து 800 ஹாஜிகளும், தெலுங்கானாவிலிருந்து 2300 ஹாஜிகளும் செல்ல உள்ளனர். ஏற்பாடுகள் தொடர்பாக ஜிஎம்ஆர் மற்றும் சவுதி ஏர்லைன்ஸ் மற்றும் பிற அனைத்து குழுக்களுடன் விரிவான கூட்டம் நடத்தப்பட்டது.

மெக்காவைச் சுற்றியுள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளதால் ஹஜ் யாத்ரீகர்களுக்கான தங்கும் வசதிகள் செய்யப்படவில்லை. அதற்கான அனுமதியைப் பெற தெலுங்கானா அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

இவ்வாறு கூறினார்.


Next Story