சிக்கிமில் 17 ஆயிரம் அடி உயரத்தில் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை பரிசோதனை
போர்க்கள சூழலை கருத்தில் கொண்டு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேங்க்டாக்,
இந்திய ராணுவத்தின் திரிசக்தி கார்ப்ஸ் படையினர் சார்பில், சிக்கிம் மாநிலத்தில் 17 ஆயிரம் அடி உயரத்தில் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையை பரிசோதனை செய்யும் பயிற்சி நடைபெற்றது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கிழக்குக் கட்டளையின் இயந்திர மற்றும் காலாட்படைகளைச் சேர்ந்த ஏவுகணை பிரிவினர் இந்த பயிற்சியில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சியின்போது, இந்திய ராணுவம் நகர்கின்ற மற்றும் நிலையான இலக்குகளை வெவ்வேறு தளங்களில் இருந்து நேரடியாக தாக்குவது குறித்து கவனம் செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்க்கள சூழலை கருத்தில் கொண்டு இந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்திய ராணுவத்தால் எட்ட முடியாத இலக்கு எதுவும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த பயிற்சி அமைந்திருப்பதாக திரிசக்தி படையினர் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story