மக்களவையில் ஊக்கமருந்து தடுப்பு மசோதா நிறைவேற்றம்


மக்களவையில் ஊக்கமருந்து தடுப்பு மசோதா நிறைவேற்றம்
x

கோப்புப்படம்

மக்களவையில் ஊக்கமருந்து தடுப்பு மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று ஊக்கமருந்து தடுப்பு மசோதா 2020-ஐ மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர் தாக்கல் செய்தார்.

இந்த மசோதா, விளையாட்டு வீரர்கள், அவர்களின் உதவியாளர்கள் உள்ளிட்டோர் ஊக்கமருந்து பயன்படுத்துவதை தடை செய்வதுடன், ஊக்கமருந்து தடுப்பு பிரிவை ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக அங்கீகரிக்கவும் வகை செய்கிறது.

இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசிய மந்திரி அனுராக் தாக்குர், 'மசோதா தொடர்பாக எந்த ஆட்சேபனையும் இருக்கக்கூடாது. போட்டிகளுக்கு முன்னும் பின்னும் விளையாட்டு வீரர்களை பிரதமர் சந்தித்து, அவர்களை வரவேற்று ஊக்கப்படுத்துகிறார். எம்.பி.க்களும் விளையாட்டு வீரர்களை சந்தித்து ஊக்கப்படுத்த வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால, ஊக்கமருந்து தடுப்புச் சட்டம் மற்றும் ஆய்வகங்களைக் கொண்ட சில நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவாகும் என்றும் அவர் கூறினார். பின்னர் இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.


Next Story