மம்தா பானர்ஜிக்கு பின்னடைவு...! துணைவேந்தர் மறுநியமனம் கொல்கத்தா ஐகோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது


மம்தா பானர்ஜிக்கு பின்னடைவு...! துணைவேந்தர் மறுநியமனம் கொல்கத்தா ஐகோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது
x
தினத்தந்தி 11 Oct 2022 12:22 PM IST (Updated: 11 Oct 2022 12:28 PM IST)
t-max-icont-min-icon

மம்தா பானர்ஜிக்கு மீண்டும் பின்னடைவு துணைவேந்தர் மறு நியமனம் குறித்த கொல்கத்தா ஐகோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது.

கொல்கத்தா

கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சோனாலி சக்ரவர்த்தி பானர்ஜியின் மறு நியமனத்தை ரத்து செய்த கொல்கத்தா ஐகோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது.

மேற்கு வங்க கவர்னரின் ஒப்புதலின்றி மாநில அரசு அத்தகைய முடிவை எடுக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கருதுகிறது.

கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சோனாலி சக்ரவர்த்தி பானர்ஜி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி மம்தா அரசால் மீண்டும் நியமிக்கப்பட்டார் இதை எதிர்த்து கொல்கத்தா ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த செப்டம்பர் 13 ந்தேதி கொல்கத்தா ஐகோர்ட்டு கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு சோனாலி சக்ரவர்த்தி பானர்ஜியின் மறு நியமனம் தவறு என்று உத்தரவிட்டது.

கொல்கத்தா ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மம்தா அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் பின்னடைவை சந்தித்து உள்ளார்.


Next Story